பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதல்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகரான சர்வானந்த் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சர்வானந்த் இயக்குநர் கரந்தி மாதவ் இயக்கத்தில் கடைசியாக நடித்த மல்லி மல்லி இதி ராணி ரோஜு படம் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து சர்வானந்த் இயக்குநர் காந்தி இயக்கும் எக்ஸ்பிரஸ் ராஜா படத்தில் நடித்து வருகின்றார். நடிகை சுரபி இப்படத்தில் சர்வானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். சாலை பயணத்தை மையப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் நடைபெறுகின்றது. டோலிவுட்டில் இதுவரை வெளிவராத வகையில் சாலை பயணத்தின் போது நாயகன் எதிர்கொள்ளும் சம்பவங்களை வைத்து இப்படத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளாராம். இது போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பது குறித்து சர்வானந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.