பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி முகமத் இயக்கிய, மெசஞ்ர் ஆஃப் காட் என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். இது முகமது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படமாகும். உலகின் பல நாடுகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ராஸா அகாடமி என்ற அமைப்பு இயக்குனர் மஜித் மஜிதிக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில், மெசஞ்சர் ஆஃப் காட் படம் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்தப் படத்தை முஸ்லிம்கள் பார்க்க கூடாது. இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். இயக்குனர் மஜித் மஜிதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு பத்வா விதிக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், தனது பேஸ்புக்பக்கத்தில் உருக்கமான விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதில், மெசஞ்ர் ஆஃப் காட் படத்தை நான் தயாரிக்கவோ அல்லது இயக்கவோ இல்லை, இசை மட்டும் தான் அமைத்துள்ளேன். இந்தப்படத்தில் கிடைத்த ஆன்மிக அனுபவத்தை நான் யாரிடமும் பகிர விரும்பிவில்லை, அது எனது தனிப்பட்ட விஷயம். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார்.