'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அண்மையில் வெளிவந்துள்ள படம் ஸ்ட்ராபெரி. பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கித் தயாரித்து நடித்துள்ள படம். பொதுவாகப் படம் ஆரம்பிக்கும் முன்பாக இப்படத்தில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் பாத்திரங்கள் யாவும் கற்பனையே அவை யாரையும் குறிப்பிடுவன அல்ல என்கிற வாசகத்தைத்தான் காட்டுவார்க்ள். ஆனால் ஸ்ட்ராபெரியில் இப்படத்தில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் பாத்திரங்கள் கற்பனை அல்ல என்று கார்டு போடுகிறார்கள்
முதலில் இயக்கிய படம், அதுவும் பேய்ப் படமா என்று பா. விஜய்யிடம் கேட்ட போது... "இது பேய் ஆவி சம்பந்தப்படட்ட படம் தான் என்றாலும், வெறுமனே பேய்க்கதை சொல்லிவிட்டு கமர்ஷியல் குதிரை என்று அதில் பயணிக்க விரும்பவில்லை. சமூக நோக்கில் ஒரு விஷயத்தையும். சொல்லியிருக்கிறேன். என்றார்.
கல்வி வியாபாரமாக்கப்படுவதை தனியார் பள்ளிகளின் பண வசூல் வேட்டை, கட்டணக் கொள்ளை பற்றி படத்தில் சொல்லியிருக்கிறார். பேய்ப் படத்தில் சொல்லியிருப்பதால் அது எடுபடாமல் போய்விட்டது.