மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கோ, ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கோ யாரையாவது விஐபிக்களை அழைத்து வருவதற்குள் சம்பந்தப்பட்ட இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் போதும் போதும் என்றாகிவிடும். அதிலும் புதுமுக படக்குழு என்றால் கேட்கவே வேண்டாம் பெரிய போராட்டமாகி விடும். ஆனால் அறிமுக இயக்குநர் ஆர்பி.ரவி இயக்கும் தற்காப்பு என்கிற படத்தின் பாடல் மற்றும் ட்ரைய்லர் வெளியீட்டுவிழா இன்று கமலா தியேட்டரில் நடந்தது. அதில் ஏகப்பட்ட விஐபிக்கள் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன்,இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கௌதம் மேனன், பி.வாசு, மிஷ்கின், எஸ்.பி.ஜனநாதன், வெங்கட்பிரவு, கே.பாக்யராஜ், ஜி.என் ஆர்.குமாரவேலன், கிருஷ்ணா, சக்தி சொந்தர்ராஜன், நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி,பாபிசிம்ஹா, ஆதி, பிரேம்ஜி, வைபவ், ரமணா, தம்பிராமையா, தயாரிப்பாளர்கள் சங்கத்தைச்சேர்ந்த டி.சிவா, ஆர் ராதாகிருஷ்ணன் எஸ்.கதிரேசன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், தயாரிப்பாளர்கள் எஸ்.நந்தகோபால், தேவிஸ்ரீதேவி சதீஷ்,டாக்டர் செல்வமுத்து, மஞ்சுநாத், விநியோகஸ்தர்கள் திருப்பூர், சுப்ரமணியன், டி.என்.சி.இளங்யோவன், என்.சி. ராஜமணி ,கமலா திரையரங்க உரிமையாளர் கணேஷ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பட்டியலைப்பார்த்தாலே கண்ணைக்கட்டுதே.!