ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2005ம் ஆண்டு வெளிவந்த 'கற்க கசடற' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி ராய். தொடர்ந்து தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய படங்களில் நடித்து தென்னிந்தியாவில் ஒரு முக்கியமான நடிகையாக உயர்ந்தார். தமிழில் தனி ஹீரோயினாக அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இன்னும் புகழ் வெளிச்சத்தில்தான் இருக்கிறார்.
திரையுலகிற்கு வந்து 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் பாலிவுட்டில் நுழைய இருக்கிறார். 2004ம் ஆண்டு நேகா தூப்பியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'ஜுலி'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள 'ஜுலி 2' படத்தில்தான் ராய் லட்சுமி என்கிற லட்சுமி ராய் நடிக்க உள்ளார். இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாமகிறார். முதல் பாகத்தின் கதையிலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாக உள்ளதாம். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண் எப்படி முன்னணி நடிகையாக மாறுகிறார் இந்தப் படத்தின் கதை என்கிறார் ராய் லட்சுமி.
இந்தப் படத்தின் ஒரு காட்சியின் 'பிகினி' உடையணிந்து நடிக்க வேண்டியுள்ளதாம். அதற்காக உடல் எடையை 15 கிலோ வரை குறைக்கும் முயற்சிகளை ராய் லட்சுமி ஏற்கெனவே ஆரம்பித்து விட்டாராம். முதல் முறையாக 'பிகினி' உடையில் ராய் லட்சுமி நடிக்கப் போகிறார். ஏற்கெனவே, தன்னுடைய கிளாமரில் பல தென்னிந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் 'பிகினி'யில் வேறு நடித்து ஹிந்தி ரசிகர்களை கிறங்கடிக்கத் தயாராகி வருகிறார்.