ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
நிச்சயமாக இது சுப்ரமணியபுரம் ஸ்வாதி பற்றிய செய்தி இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோம். இது கேரள ஸ்வாதி.. அதாவது ஸ்வாதி நாராயணன்.. தற்போது ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக 'சு சு சுதி வால்மீகம்' படத்தில் கதாநாயகியாக மாறியிருக்கிறார்.. அப்படியென்றால்..? யெஸ்.. 15 வருடங்களுக்கு முன்பு மலையாள இயக்குனர் வினயன் இயக்கிய 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுமான இவர், இப்போது சரியான நேரத்தில் ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருக்கிறார்.
இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க நடிகை ஆஷா சரத் தான் காரணம்.. பின்னே, நான்கு வயதிலேயே குச்சுப்புடி நடனம் கற்றுக்கொண்டு, இன்று நடனத்தில் பல நுணுக்கங்களை கற்று தேர்ந்துள்ள ஸ்வாதி, ஆஷா சரத்தின் டான்ஸ் குரூப்பில் முக்கியமானவர் அல்லவா..? இவரிடம் அழகுடன் சேர்த்து நடிப்பு திறமையும் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்த ஆஷா சரத் தான், இந்தப்படத்தின் இயக்குனரான ரஞ்சித் ஷங்கரிடம் சிபாரிசு பண்ணியுள்ளார்.. ரஞ்சித் ஷங்கரின் முந்தைய படமான 'வர்ஷம்' படத்தில் மம்முட்டியின் ஜோடியாக ஆஷா சரத் தான் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தான் ஸ்வாதி நாராயணன் பற்றி ஆஷா சொன்னதும் அவரை இந்தப்படத்தில் கதாநாயகி ஆக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.