'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் சன்னி லியோன், விரைவில் ஒரு படத்தை தயாரித்து அதில் அவர் சூப்பர் உமனாக நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செய்தியை அவர் தற்போது மறுத்துள்ளார். நான் தயாரிக்கும் அந்த படம் சூப்பர் ஹீரோ கதையில் உருவாகிறது. அதில் நானும் நடிக்கிறேன். மற்றபடி நான் சூப்பர் உமனாக நடிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், சில நடிகைகள் சுயசரிதை எழுதுவது பற்றி சன்னிலியோன் விடுத்துள் ள செய்தியில், எனக்கும் எதிர்காலத்தில் சுயசரிதை எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஆனால், என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை என்பதால் நான் எழுதும் சுயசரிதையில் மற்றவர்களுக்கு தெரியாத விசயங்கள் எதுவும் இருக்காது. அதனால் அதில் நான் ஏதாவது ரகசியங்களை எழுதுவேன் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அது ஏமாற்றத்தையே கொடுக்கும் என்றும் சன்னி லியோன் கூறியுள்ளார்.