Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் அவனில்லை பாணியில் மீண்டும் ஜீவன்!

15 செப், 2015 - 07:26 IST
எழுத்தின் அளவு:
Jeevn-again-in-Naan-Avan-Illai-type-movie

கெளதம்மேனன் இயக்கிய காக்கா காக்க படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஜீவன். அதையடுத்து சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே படத்தில் ஹீரோவான அவர், நான் அவனில்லை. மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை-2 என பல படங்களில் நடித்தார். பின்னர் கவிதாலயா தயாரிப்பில் அவர் நடித்த கிருஷ்ணலீலை படம் வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டது. விளைவு, அந்த படத்தோடு ஜீவனின் மார்க்கெட்டும் சரிந்தது.


அதனால் சில வருடங்களாக படவாய்ப்புகள் இல்லால் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் அதிபர் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அப்படி அவர் நடித்த அந்த படம் வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை படத்தின் மீது நம்பிக்கை வைத்து இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார் ஜீவன்.


இதற்கிடையே மேலும் சில இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்லி வரும் நிலையில், ஏற்கனவே ஜீவன் நடித்து கிடப்பில் கிடந்த பயணிகள் கவனத்திற்கு என்ற படத்தை இப்போது தூசு தட்டுகிறார்கள். இதுவும் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான நான் அவனில்லை பாணி கதைதானாம். அதனால் இந்த படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கும் ஜீவன், பாசிட்டீவை விட நெகடீவ் கலந்த ஹீரோ கதைகளில் நடிக்க தனக்கு அதிக விருப்பம் உள்ளதாகவும் இயக்குனர் களிடம் கூறி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in