ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுதந்திர போராட்ட வீரர். ஆன்மீக வாதி. தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தலைமையேற்று பணியாற்றிவர். அவரை தெய்வமாக மதிக்கும் மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பலர் முயற்சித்தும் அவை வெற்றி பெறவில்லை. தற்போது சூலூர் கலைபித்தன் என்பவர் பசும்பொன் தெய்வம் என்ற பெயரில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுத்து வருகிறார்கள். ராஜா முகம்மது என்பவர் முத்துராமலிங்க தேவராக நடிக்கிறார்.
படத்தை இயக்கும் சூலூர் கலைப்பித்தன் சாட்டையில்லாத பம்பரம், கண்ணத் தொறக்கணும் சாமி போன்ற படங்களை தயாரித்தவர், துளசி மாலை, சுதந்திர பாரதி படங்களை இயக்கியவர். பசும்பொன் தெய்வம் படத்தின் 70 சதகிவித படப்பிடிப்புகளை முடித்து விட்டார்.