தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டாப் டென்னில் முதல் இடத்தில் எப்போதும் இருப்பது ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஜொலித்த பல நட்சத்திரங்கள் திரைப்பட நட்சத்திரங்களாக மாறி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இதன் இறுதி போட்டி இன்று மலேசியாவில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆட 4 ஜோடிகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினமே மலேசியாவிற்கு சென்று சேர்ந்து விட்டனர். இந்த நான்கு ஜோடிகளில் ஒன்று நம்பர் ஒன் ஜோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரமாண்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. மலேசிய மக்கள் முன்னிலையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.