டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நம் ஊரில் சில நடிகர்களுக்கு ஒரு குணாதிசயம் உண்டு.. அதாவது ஆக்சன் ஹீரோவாகவோ, அல்லது காமெடி நாயகனாகவோ நடித்து வந்தவர்களுக்கு திடீரென தங்களது வாழ்நாளில் எப்படியாவது தேசிய விருது வாங்கிவிடவேண்டும் என திடீரென தோன்றுவது உண்டு.. அதற்காகவே தேசிய விருது பெற்ற, அல்லது விருதுக்குரிய தரத்திலான படங்களை இயக்கும் இயக்குனர்களை தேடிப்போய் கால்ஷீட் கொடுத்து நடிப்பார்கள். தற்போது மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனரான தேசியவிருது பெற்ற படங்களை இயக்கிய டாக்டர் பைஜுவின் இயக்கத்தில் நடித்து வருவதையும் அப்படித்தான் பார்க்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.
டாக்டர் பைஜுவை பற்றி அவ்வப்போது நாம் சொல்லி வந்திருக்கிறோம்.. காமெடி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடுவை குணச்சித்திர நடிகராக்கி தேசிய விருது பெற்றுத்தந்தவர் இவர். அந்தவகையில் தான் தற்போது இவர் இயக்கிவரும் 'வலிய சிறகுள்ள பட்சிகள்' படத்தில் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார் என்று சொல்லப்படுவதை குஞ்சாக்கோ போபன் மறுக்கிறார்.