பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தவர் சித்தார்த். தெலுங்கு படங்களில் நடித்து வெற்றி பெற்ற சித்தார்த், தமிழில், 180, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் கடைசியாக அவர் நடித்த காவியத்தலைவன் மற்றும் எனக்குள் ஒருவன் படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் தனது அடுத்தப்படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என்ற முனைப்போடு நடித்து வருகிறார் சித்தார்த்.
தற்போது சுந்தர்.சி-யின் அரண்மனை-2 படத்தில் நடித்து வரும் சித்தார்த், கூடவே சத்தமில்லாமல் ஒரு படத்தை தயாரித்தும், நடித்தும் வருகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ''ஜில் ஜங் ஜக்'' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'காதலன்' படத்தில் வடிவேலு பேசிய ஒரு டயலாக் தான் இது.
புதியவர் தீரஜ் வைத்தி இயக்குகிறார், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சித்தார்த் ஹீரோவாக நடிப்பதுடன் இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். சித்தார்த் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். முன்னதாக காதலில் சொதப்புவது படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினே கிடையாது என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி தான் படத்தில் அதிகம் இருக்குமாம்.
ஜில் ஜங் ஜக் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகளை எட்டியுள்ளதாம். தனது முந்தைய இரண்டு படங்களின் தோல்வியை இந்த ஜில் ஜங் ஜக் படம் தகர்க்கும் என்று நம்புகிறார் சித்தார்த்.