ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணுடன் சர்தார் கபார் சிங் படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றார் காஜல் அகர்வால். இயக்குநர் பாபி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பவன் கல்யாண் வில்லனுடன் மோதும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இதில் காஜல் மற்றும் பவன் கல்யாணுக்கு இடையேயான காதல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இரண்டு கட்ட படப்பிடிப்பிற்கு பின்னர் ஓய்வெடுத்துக் கொண்ட பவன் கல்யாண் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ரசிகர்கள் பவன் கல்யாணை திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் மற்றும் ஈரோஸ் நிறுவனங்களின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.