ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்து விரைவில் வெளிவர உள்ள புலி படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த படம் மேலும் பல புதுமைகளை படைக்க உள்ளது.
ரொமான்டிக் மற்றும் கமர்ஷியல் வகையிலான படங்களில் மட்டுமே விஜய், முதன்முறையாக சரித்திர பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளார். டோலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களின் உரிமைகளை வாங்கி, அதை தமிழில் ரீமேக் செய்து, கோலிவுட்டில் பெரும்வெற்றி பெற்ற படங்களாக மாற்றிய பெருமை, விஜயையே சாரும். இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படம், முதன்முறையாக ஹிந்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ள புலி படத்திற்கு, நடிகை ஸ்ரீதேவி, மூன்று மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியுள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீதேவி, தமிழ்ப்படத்தி்ல் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக, சென்னையில் அவர் தங்கியிருந்து டப்பிங் பேசி குடுத்துள்ளார்.