ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்யால் சின்ன அசின் என்று வர்ணிக்கப்பட்ட பூர்ணா தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது மிஷ்கின் நடிக்கும் சவரக்கத்தி படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
தமிழில் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் மலையாளத்திலும், தெலுங்கிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு டான்சர் என்பதால் ஒரு பாட்டுக்கு ஆடுவதை நான் தவறாக கருதவில்லை. அதை அயிட்டம் சாங் என்று சொல்வதுதான் தவறு. மிஷ்கின் படம் என்றதுமே நடிக்க ஒப்புக் கொண்டேன். இரண்டு குழந்தைக்கு தாய். கர்ப்பிணி, இயக்குனர் ராமின் ஜோடி என்பதெல்லாம் அதற்கு பிறகுதான் தெரியும். அதற்காக நான் கவலைப்படவில்லை. காக்க முட்டையில் ஐஸ்வர்யா நடித்த மாதிரி, கஹானியில் வித்யாபாலன் நடித்த மாதிரி ஒரு கேரக்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது சவரக்கத்தி கிடைத்தது. பயன்படுத்திக் கொண்டேன்.
வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்பது உண்மை. இதுவரை எனக்கு காதல் எதுவும் வரவில்லை. அதனால் என் திருமணத்தை குடும்பத்தினர் பொறுப்பில் விட்டுவிட்டேன். சினிமாவில் இருப்பவரையே திருமணம் செய்து கொண்டால் அவர் புரிந்து கொள்வார் எந்த பிரச்னையும் இருக்காது. அல்லது நன்கு தெரிந்தவரை நம்மை புரிந்தவரை திருணம் செய்தாலும் பிரச்னை இருக்காது. டாக்டர், என்ஜினீயர் போன்று நன்கு படித்தவர்களை திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரு நடிகையை புரிந்து கொள்வது கடினம். அவர்கள் லைப் ஸ்டைல் வேறாக இருக்கும். இதனால்தான் பிரிய நேர்கிறது. அதனால் இந்த விஷயத்தில் நான் கவனமாக இருக்கிறேன் என்கிறார் பூர்ணா.