ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவரஞ்சனி யார் என்பது இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1991ம் ஆண்டு வெளிவந்த 'மனசார வாழ்த்துங்களேன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின் பிரபுவுடன் 'சின்ன மாப்ளே', ரஞ்சித்துடன் 'பொன்விலங்கு', கமல்ஹாசனுடன் 'கலைஞன்', அரவிந்த்சாமியுடன் 'தாலாட்டு', விஜயகாந்துடன் 'ராஜதுரை', கார்த்திக்குடன் 'காத்திருக்க நேரமில்லை', சரத்குமாருடன் 'அரண்மனைக் காவலன்', சத்யராஜுடன் 'வண்டிச்சோலை சின்ராசு', பிரசாந்துடன் 'ராசாமகன், செந்தமிழ்ச் செல்வன்,' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.
அதன் பின் தமிழிலிருந்து தெலுங்கிற்குப் போய் சில படங்களில் நாயகியாக நடித்தார். அப்போது உடன் சேர்ந்து நடித்த தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்துடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்கள். அவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நாயகனாக அறிமுகமாக உள்ளார். நாகார்ஜுனா அவருடைய சொந்த நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள 'நிர்மலா கான்வென்ட்' படத்தில் ரோஷன் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. படத்திற்கான பிரமோஷன் வேலைகளை நாகார்ஜுனா தற்போது ஆரம்பித்துள்ளார்.
ரோஷன் இதற்கு முன் 'ருத்ரமாதேவி' படத்தில் ராணா டகுபதியின் சிறுவயது தோற்றத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மற்றுமொரு வாரிசு நடிகர் விரைவில் அறிமுகமாக உள்ளார்.