பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தலப்பாக்கட்டு பிரியாணி எப்படி பொதுமக்கள் மத்தியில் பிரபலமோ, அதேமாதிரி திரையுலகில் தல பிரியாணி பிரபலமாகியுள்ளது. அஜீத்தின் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர்களுக்கு தனது கையாலே பிரியாணி சமைத்து பரிமாறுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் தனக்கு படப்பிடிப்பு இல்லாத சமையங்களில் அவ்வப்போது சமைக்கும் அஜீத், மாதம் ஒரு முறை ஏதேனும் ஒரு ஸ்பெசல் அயிட்டங்களை தனது வீட்டு நபர்களுக்கு தானே சமைத்து விருந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார்.
அதோடு, தான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் சினிமா கலைஞர்களுக்கும் அவ்வப்போது பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார் அஜீத். ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது தனக்கான சீன் இல்லாத நாளில், படப்பிடிப்பு தளத்திலேயே சமைத்து, மதிய நேரத்தில் அனைவருக்கும் விருந்து பரிமாறுவார். அதை மற்றவர்கள் ருசித்து சாப்பிடுவதை ரசிப்பார்.
அப்படிப்பட் அஜீத், தற்போது நடித்து வரும் 56வது படப்பிடிப்பு தொடங்கியபோதே யூனிட்டுக்கு பிரியாணி விருந்து வைக்க திட்டமிட்டார். ஆனால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்ததால் அது நடக்கவில்லை. இருப்பினும் இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருவதோடு, இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியிருப்பதால் நேற்று முன்தினம் யூனிட்டுக்கு விருந்து கொடுத்துள்ளார் அஜீத். என்னதான் தானே முன்னின்று சமைத்தபோதும், பரிமாறும் நேரத்திலும் அங்குமிங்கும் ஓடி அனைவருக்கும் பரிமாறியும் மகிழ்ந்திருக்கிறார் அஜீத்.