பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஆன்லைன்', அதாவது இணையதளம் என்றாலே அஜித் ரசிகர்கள்தான் என்பதை இத்தனை காலமாக அஜித் ரசிகர்கள் நிரூபித்து வந்தார்கள். ஆனால், 'புலி' படத்தின் மூலம் அந்த சாதனையை முறிடியக்க விஜய்யும், விஜய் ரசிகர்களும் தயாராகிவிட்டார்கள். தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் 'யு டியூப்' இணையதளத்தில் டிரைலரை வெளியிடுவதும், அதை எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்பதும், அதற்கு எத்தனை பேர் 'லைக்' கொடுக்கிறார்கள் என்பதும் ரசிகர்களிடம் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
அஜித் நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர்தான் இதுவரை அதிகம் பேர் 'லைக்' செய்த ஒரு டீசராக இருந்து வருகிறது. இதுவரை அந்த டீசரை 95,567 பேர் லைக் செய்துள்ளனர். இதுதான் இதுவரை யு டியுபில் வெளியான தமிழ்ப் படங்களின் டீசர் மற்றும் டிரைலரின் அதிகப்படியான 'லைக்' எண்ணிக்கை.
இப்போது 'புலி' படத்தின் டிரைலர் அந்த 'லைக்' எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்க உள்ளது. இதுவரை 'புலி' படத்தின் டிரைலரை 92,947 பேர் 'லைக்' செய்துள்ளனர். இன்னும் 3,000க்கும் குறைவானவர்கள் 'புலி' படத்தின் டிரைலரை 'லைக்' செய்துவிட்டார் அஜித்தின் சாதனை முறியடிக்கப்பட்டுவிடும். தாங்கள்தான் இதுவரை ஆன்லைன் புலிகள் என சொல்லி வந்த அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களின் 'புலி' லைக்கால் கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டனர்.
'புலி' சாதனையை அவர்கள் முறியடிக்க அடுத்த அஜித் படத்தின் டீசர் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.