புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அஜித்குமாரின் மச்சினிச்சி ஷாம்லியின் திரைத்துறை மறுபிரவேசத்திற்கு, அஜித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்திலான அஞ்சலி படத்தின் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஷாமிலி. இரண்டரை வயதிலேயே தனது தத்ரூப நடிப்பின் மூலம், இன்றளவும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதற்கு பிறகு, 10க்கும் மேற்பட்ட படங்களில், ஷாமிலி நடித்துள்ளார். ஷாமிலி, டோலிவுட்டில், ஓய் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்படிப்பு படிப்பதற்காக, வெளிநாடு சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து, படிப்பை முடித்து மீ்ண்டும் ஷாமிலி இந்தியா திரும்பியுள்ளார். படங்களிலும் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் மற்றும் விக்ரம்பிரபுவிற்கு ஜோடி என 2 படங்களில் நடிக்க ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார்.
அக்கா ஷாலினியைப் போன்றே, ஷாமிலியும் குடும்பப்பாங்கான கேரக்டர்களிலேயே நடிக்க திட்டமிட்டுள்ளார். ஷாமிலியின் இந்த முடிவிற்கு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அஜித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அஜித் சிறந்த மோட்டார் பைக் வீரர் மட்டுமல்லாது, சிறந்த புகைப்படக்கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. தல 56 படத்தின் படப்பிடிப்பினிடையே, அப்புக்குட்டி (என்ற) சிவபாலன் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனிற்கு போட்டோஷூட் செய்திருந்த அஜித், தற்போது, ஷாமிலிருக்கும் போட்டோ சூட் செய்துள்ளார்.
அஜித்குமார், ஷாலினியை திருமணம் செய்துகொள்வதற்கு, ஷாமிலி உதவி செய்வதற்கு பிரதிபலனாக, பாலிவுட் நடிகர் ஷாரூக் கானை, ஷாமிலி சந்திக்க அஜித் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.