ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி வருகிற அக்டோபர் 1ந் தேதி வெளிவருகிறது. சிம்பு தேவன் இயக்க, நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர்.
படம் வெளிவருதற்கு முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டது. இதன் தெலுங்கு உரிமம் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.ஆர்.வி.மீடியா வாங்கி உள்ளது. வாங்கப்பட்ட தொகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. விஜய் நடித்த ஜில்லா படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கவே புலி படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. விஜய் படங்களிலேயே தெலுங்கு உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டிருப்பது புலிதான். அதேபோல கன்னட உரிமையை எஸ்.நாராயணன் வாங்கியுள்ளார். 4 கோடிக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முதலில் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியிடப்படுவதாக இருந்த படத்தை பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்தியிலும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளனர்.