பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கி உள்ள அடுத்த படம் குற்றமே தண்டனை. இதில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா நடித்துள்ளனர். இதில் விதார்த்த கண்பார்வை குறைபாடு உள்ளவராக நடித்துள்ளார்.
வங்கிக்கு வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து தரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார் விதார்த், அவருக்கு பார்வை மங்கலாகத் தெரியும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வாழ்ந்து கொண்டிருப்பார். ஒரு நாள் பணியில் இருந்து திரும்பும் வழியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவதை பார்த்து விடுகிறார். கொலையாளிகளால் தனக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக தனக்கு கண்பார்வை குறைபாடு இருப்பதை காட்டி அந்த குற்றவாளிகளை தப்பிக்க விடுகிறார். ஆனால் அவர் மனசாட்சி அவரை குத்திக் கிழித்துக் கொண்டே இருக்கிறது. அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. குற்றவாளிகளை காட்டிக் கொடுக்கவும் இல்லை என்பது அவரது மனதை உறுத்துகிறது. அடுத்து அவர் என்ன செய்கிறார் என்பது கதை.
குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பினாலும் குற்ற உணர்விலிருந்து தப்பவே முடியாது என்பதை சொல்கிற படம். விதார்த்தின் காதலியாக பூஜா நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டு பெண்ணாக ஐஸ்வர்யரா ராஜேஷ் நடித்துள்ளார். மணிகண்டனே ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். காக்கா முட்டையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக தயாராகி இருக்கிறது குற்றமே தண்டனை.