பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டில் முகுந்தா படத்தின் வாயிலாக காதல் நாயகனாக அறிமுகமான நடிகர் வருண் தேஜ் தற்போது போர்வீரனாக ரசிகர்களைக் கவரவுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த கபார் இஸ் பேக் படத்தை இயக்கிய இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் டோலிவுட்டில் உருவாகியுள்ள கஞ்சே படத்தில் போர் வீரனாக வருண் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரக்யா ஜெஸ்வால் நாயகியாக நடித்துள்ளார்.இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய இப்படத்தில் காதலும் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. பஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இப்படம் குறித்து கூறிய இயக்குநர் கிரிஷ் இப்படத்தில் வரும் போர் காட்சிகளுக்கு விஷுவல் எபெக்ட் செய்வது சவாலாக அமைந்ததாகவும் அதனை நேர்த்தியாக செய்து முடிதுள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டு ராஜமௌலி வாழ்த்துக் கூறியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிரிஷ் இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரைக்கு வரும் என உறுதி செய்துள்ளார்.