இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டில் ரூ.200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்து அதிகம் வசூல் செய்த தெலுங்கு படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4000த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் பாகுபலி படம் வெளிவந்தது. பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்த பாகுபலி படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தை ஆங்கிலம், ஜப்பானிய மொழி மற்றும் கொரிய மொழி போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து மீண்டும் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு திரைப்படம் ஒன்று இத்தனை மொழிகளில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டதாம். வெளிநாட்டு ரசிகர்களின் ரசனைக்கேற்ப படத்தின் சில பாடல்களை நீக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட் எடிட்டர் இப்படத்திற்கான எடிட்டிங் பணிகளை செய்து வருகின்றார்.