சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்துள்ள படம் ''தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்''. ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ளனர். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் இசை அமைத்துள்ளார். பிரபுதேவாவின் உதவியாளர் பிரேம்சாய் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடியாகி ஒரு வருடமாகிவிட்டது. இந்தப் படத்தில் நடித்த யாமி கவுதம் இந்தியில் பெரிய நடிகையாகிவிட்டார்.
கவுதம் மேனனின் படங்களின் தொடர் தோல்வி, அவருக்கு ஏற்பட்ட சில பொருளாதார நெருக்கடியால் படத்தை வெளியிட முடிவயில்லை. தங்க மீன்கள் படத்தைகூட வெளியிட முடியாமல் ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷனுக்கு விற்றார். என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு கவுதம்மேனின் நிலையில் பல மாற்றங்ககள். அச்சம் என்பது மடமையடா படத்தையும் வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ''தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்'' படத்தையும் வெளியிட தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறார் கவுதம் மேனன். தற்போது இதன் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.