ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டில் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அக்கினேனி அகில் ஒரு தெலுங்கு படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் நிதின் தயாரிப்பில் இயக்குநர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் விநியோக உரிமைக்கான வியாபாரம் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆந்திராவில் இப்படத்தை வெளியிட ரூ.18 கோடி கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். நடிகர் நாகார்ஜுனாவின் படங்களின் வியாபாரத்தை விட அகில் படத்தின் விற்பனை எதிர்பார்த்ததற்கு மேல் அமோகமாக நடைபெறுகின்றதாம்.மேலும் அறிமுக நடிகர் ஒருவரின் படம் இந்த அளவிற்கு விற்பனை செய்துள்ளது இதுவே முதன் முறை என்றும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. நாகார்ஜுனாவின் பிறந்த நாளான்று வெளியான அகில் படத்தின் டீசரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக படப்பிடிப்புத் தள தகவல்கள் தெரிவிக்கின்றன.