Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“நிவின்பாலி என் ஆலோசனைப்படி நடக்கவேண்டிய அவசியமில்லை” - பிருத்விராஜ்..!

04 செப், 2015 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Nivin-pauly-may-not-follow-my-advice-says-Prithviraj

கடந்த மேமாதம் நிவின்பாலி நடித்த சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படம் வெளியான அதே தினம் தான், அவரும் பிருத்விராஜும் முதல்முறையாக இணைந்து நடித்த 'இவிடே' படமும் வெளியானது. ஆனால் படத்தின் ரிசல்ட் என்னவோ பிளாப் கேட்டகிரி தான். அந்த சமயத்தில் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு படம் அதி பயங்கர வெற்றி பெற்றாலும், அட்டர் பிளாப் ஆனாலும் அவற்றை ஒரே மனநிலையில் அணுகவேண்டும். அப்போதுதான் அடுத்த படத்தில் சரியான கவனத்தை செலுத்த முடியும்” என பிருத்விராஜ் தனக்கு ஒருசில ஆலோசனைகளை வழங்கினார் என நிவின்பாலி கூறியிருந்தார்.


அதுமட்டுமல்ல “நாம் ஒருசில வருடங்களில் சீரியசான வெற்றிகளை பெற்றுவிட்டோம். இப்போது ஒரு சக்சஸ் படத்திற்கான பார்முலா என்னவென்று நமக்கு தெரிந்திருக்கும்.. இனி அதில் தான் போகவேண்டும் என நம்மை சுற்றியுள்ளவர்கள் சொல்வார்கள். தயாரிப்பாளர்களும் அதைத்தான் விரும்புவார்கள். அந்த பாதையிலேயே படங்களை பண்ணினோம் என்றால் ஒரு கட்டத்தில் திரும்பி பார்க்கும்போது எல்லா படங்களும் ஒரே சாயலிலேயே இருக்கும். அதனால் நம் மனதுக்கு பிடித்த படங்களை மட்டும் பண்ணவேண்டும். அதில் தயக்கமே இருக்க கூடாது” இதுதான் 'இவிடே' படப்பிடிப்பின்போது நிவின்பாலிக்கு பிருத்விராஜ் சொன்ன மற்றொரு ஆலோசனை.


ஆனால் சமீபத்தில் இதுபற்றி ஒரு பேட்டியில் பிருத்விராஜ் கூறும்போது, “நான் சொன்னவற்றை நிவின்பாலி அப்படியே பாலோ பண்ணவேண்டிய அவசியம் இல்லை. காரணம் நிவின்பாலி தேர்ந்தெடுக்கும் படங்களும், அவற்றின் தொடர் வெற்றிகளும் அவர் சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறார் என்றும், சினிமாவை அவர் எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக காட்டுகிறது” என நிவின்பாலி சரியான் ரூட்டில் தான் போய்க்கொண்டிருப்பதாக வழிமொழிந்துள்ளார் பிருத்விராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in