பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கத்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் 'அகிரா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கப் போவது யார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என டோலிவுட்டில் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், டோலிவுட்டில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்றும் பேச்சு எழுந்துள்ளது. அந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸே பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கப் போகிறார் என்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்கிறார்கள். ஆனால், விஜய் ரசிகர்களோ, விஜய்யின் அடுத்த படம் கண்டிப்பாக முருகதாஸுடன்தான் இருக்கும் என்கிறார்கள். விஜய் தற்போது அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும். அதே சமயம் சசிகுமார், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் விஜய்யை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவலும் நீண்ட நாட்களாகவே உள்ளது. தனது அடுத்த படம் ஆக்ஷன் படமாக இல்லாமல் ஒரு இனிமையான காதல் கதையாக இருக்க வேண்டும் என விஜய் நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இன்னும் சில மாதங்கள் வரை ஆகலாம்.