'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
ஸ்ருதிஹாசன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ஏழாம் அறிவு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதியின் தயாரிப்பில், 2011ல் வெளியான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி. ஏறக்குறைய 4 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் ஸ்ருதி. இதை அவரே உறுதி செய்திருக்கிறார். பூஜை படத்திற்குப் பிறகு சூர்யாவை வைத்து சிங்கம் 3 படத்தை இயக்கவிருக்கிறார் ஹரி. ஸ்டுடியோ கிரீன் படநிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்ன் கதைவிவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஹரி, கடந்த சில வாரங்களாக இப்படத்தின் ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலைகளில் இறங்கி உள்ளார்.
விக்ரம்குமார் இயக்கும் 24 படத்தில் சூர்யா தற்போது பிஸி. 24 படம் முடிந்த பிறகு சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். விஜய்யுடன் புலி படத்தில் நடித்து முடித்துவிட்ட ஸ்ருதி, தற்போது அஜித்துடன் தல 56 படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து, சூர்யாவுடன் சிங்கம் 3! ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நாயகர்களின் படங்களிலும் கதாநாயகி ஆகி இருக்கிறார் ஸ்ருதி.