டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அப்பா கமல்ஹாசனுக்கு தானும் சளைத்தவரல்ல என ஸ்ருதிஹாசன் நிரூபித்திருக்கிறாராம். நடிப்பில் அவ்வளவு சீக்கிரம் கமல்ஹாசனைத் தொட்டுவிட முடியாது. ஆனால், முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். 2007ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான 'வெல்கம்' படத்தின் இரண்டாம் பாகமான 'வெல்கம் பேக்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், அனில் கபூர், நானா படேகர், பரேஷ் ராவல், நஸ்ருத்தீன் ஷா, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் என்பதுதான் பாலிவுட்டின் தற்போதைய பரபரப்பு. தனது அண்ணன்களான அனில் கபூர், நானா படேகர் ஆகியோரிடம் காதலன் ஜான் ஆபிரகாமை, மிகவும் நல்லவர் என ஸ்ருதிஹாசன் அறிமுகம் செய்து வைப்பாராம். அடுத்த நொடியே அண்ணன்களுக்கு முன்னால் தங்கை ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் கொடுப்பாராம் ஜான் ஆபிரகாம்.
“அந்த முத்தக் காட்சியைப் பற்றி படம் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும். அது ஒரு சுவாரசியமான காட்சி, அதே சமயம் வேண்டுமென்றே அந்த முத்தக் காட்சியைப் பற்றி நான் விளம்பரப்படுத்த மாட்டேன்,” என்று ஸ்ருதிஹாசன் சொல்லியிருக்கிறார். முதல் முறையாக ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் ஸ்ருதி நடித்திருக்கிறாராம்.