பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் வெளியான ஜிகினா படத்தில் விஜய் வசந்தை பேஸ்புக்கில் காதலிக்கும் பெண்ணாக நடித்தவர் ஸ்ரீதேவி. கருப்பாகவும், அழகின்றியும் இருப்பதால் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட சினிமாவில் ஜெயித்து காட்டுவேன் என்ற லட்சியத்துடன் கல்லூரியில் படிக்கும்போதே நாடகம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அதன் பிறகு சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனார்.
நண்பர்கள் மூலம் ஜிகினா படத்திற்கு அழகில்லாத ஒரு ஹீரோயின் தேவை என்பதை அறிந்து தேர்வுக்கு சென்று தேர்வானார். படம் வெளியாகும் வரை அவரது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. படம் வெளிவந்ததும் எல்லோரும் ஸ்ரீதேவியின் நடிப்பை பாராட்டினார்கள். ஜிகினா படத்தின் கேரக்டருக்கு ஓகே ஆனால் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே எல்லோரும் நம்பினார்கள்.
ஆனால் அடுத்து அவர் எம்.ஆர்.பாரதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் கேரக்டரும் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று ஸ்ரீதேவி நம்புகிறார்.