ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் மஞ்சு விஷ்ணு மாறுபட்ட கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டைனமைட் திரைப்படம் நாளை(செப்டம்பர் 4) உலகம் முழுவதும் திரைக்கு வருகின்றது. இயக்குநர் தேவ கட்டா இயக்கிய இப்படத்தில் நடிகை பிரணிதா சுபாஸ் நாயகியாக நடிக்கின்றார். நடிகர் சக்ரவர்த்தி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நடிகர் மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. நிசாமில் மட்டும் 210-த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் டைனமைட் திரைப்படம் வெளிவரவுள்ளது. மஞ்சு விஷ்ணுவின் திரைப்படம் ஒன்று உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளிவருவது இதுவே முதன்முறையாகும். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி திரைப்படம் தெலுங்கில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.