‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'எனக்கு அரசியல் ஆசையெல்லாம் எதுவுமில்லை; நான் கலைஞன்; மக்களை மகிழ்விப்பதே என் வேலை' என, டயலாக் பேசினாலும், விஷாலின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரொம்பவே யோசிக்க வைக்கிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத வகையில், தன் பிறந்த நாளில், நலத் திட்டங்களை அறிவித்து, தையல் மிஷின், நோட்டுப் புத்தகம் வழங்கி, அசத்தினார். இது மட்டுமில்லாமல், இலங்கை அகதிகளுடன் சேர்ந்து, தன் பிறந்த நாளை கொண்டாடினார். 'நடிகர் சங்க விவகாரம், இலங்கை தமிழர் விவகாரம் என, விஷாலின் ரூட், அரசியலில் குதிப்பதற்கான அஸ்திவாரமே' என, கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன. விஷால் தரப்போ, 'பாயும் புலி படத்தின் ரிலீசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை, சுமுகமாக தீர்ப்பதில், விஷால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அரசியல் பற்றி எல்லாம் கேட்காதீர்கள்' என்கிறது.