இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ் , சிம்பு என்று ஹீரோக்கள் ராஜ்ஜியமாக இருந்த கோலிவுட், தற்போது மெல்ல மெல்ல ஹீரோக்கள் அவதாரம் எடுத்து வரும் ஹீரோயின்களின் கைவசம் ஆகி வருகிறது.
அதிரடி சண்டைக்காட்சிகள் என்றாலே ஹீரோக்கள் மட்டுமே பண்ணுவார்கள் என்ற நிலை மாறி, தற்போது ஹீரோயின்களே, அதிரடியான படங்களில் நடித்து வருகின்றனர்.
பாகுபலி படத்தில் தேவசேனா கேரக்டரில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அனுஷ்கா, ருத்ரமாதேவி படத்தில், தற்காப்பு கலைகளில் நிபுணத்துவம் பெற்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
திறந்திடு சீசே படத்தில், தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாகுபலி படத்தில், போர்வீராங்கனையாக நடித்திருந்த தமன்னாவின் நடிப்பும் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில், பல இயக்குநர்கள் பெண்களை மையப்படுத்திய படங்களை இயக்கிவந்தபோதிலும், இதற்கு அச்சாரமாக விளங்கியது இயக்குநர் கவுதம் மேனன் என்றே சொல்ல வேண்டும். காக்க காக்க என்றுஅவரது ஒவ்வொரு படங்களிலும், பெண் கேரக்டர் வலுமிக்கதாகவே இருக்கும்.....