தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விரைவில், அரசியலில் குதிப்பேன், என, நடிகை நமீதா கூறினார். நடிகர் விஜயகாந்த் நடித்த, எங்கள் அண்ணா திரைப்படம் மூலம், 2002ல், நமீதா அறிமுகமானார்; 2010ல், வெளியான, இளைஞன் படத்திற்கு பின், பட வாய்ப்பு அமையவில்லை. நமீதா, அதிகளவில் சதை போட்டதால், பட வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எனினும், விளம்பர படங்கள், கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டார். சென்னையில் நேற்று, நமீதா கூறியதாவது:திடீரென உடல் எடை கூடியதால், பட வாய்ப்பு குறைந்தது. முன்னணி நடிகையாக இருந்த நான், படவாய்ப்பு வராததால், மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இதனால், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என, முடிவு செய்தேன். 94 கிலோவாக இருந்த உடல் எடையை, தீவிர உடற்பயிற்சி செய்து, 76 கிலோவாக குறைத்து விட்டேன். மூன்று மாதங்களில், 18 கிலோ எடை குறைந்தது சந்தோஷமாக இருக்கிறது.
சினிமாவில் நடிக்க பேச்சு நடக்கிறது. எனக்கு, ஆக் ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்கும். அரசியலுக்கு வாருங்கள் என, கடந்த தேர்தலின் போது, சில கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தது. பிறகு பார்க்கலாம் என, சொல்லிவிட்டேன். தற்போது அரசியலில் சேர முடிவு செய்துள்ளேன்; விரைவில், அரசியல் கட்சியில் சேர்வது உறுதி. எந்த கட்சி என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கு பொருத்தமான நபரை, இன்னும் சந்திக்கவில்லை; சந்தித்தால், திருமணம் செய்து கொள்வேன்; மூன்று குழந்தைகள் பெற ஆசை. இவ்வாறு நமீதா கூறினார்.