ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வசூலிலும் வரவேற்பிலும் இமாலய சாதனை படைத்த பாகுபலி படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று கிளிக்கி மொழி. பாகுபலி படத்தில் ஆதிவாசி மக்கள் பேசும் மொழியாக கிளிக்கி மொழியை மதன் கார்க்கி உருவாக்கி அதனை பயன்படுத்தியுள்ளார். பாகுபலி படத்தின் வெளியீட்டின் போது இம்மொழி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுது. டோலிவுட்டின் பிரபல நடிகை அடா சர்மா கிளிக்கி மொழியின் வசனங்களுக்கு டப்மேஷில் வாயசைத்து அதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அடா சர்மாவின் இந்த டப்மேஷ் பிரபலமாகி வருகின்றது. இதுவே அடா சர்மாவின் முதல் டப்மேஷ் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் 1920 எனும் திகில் படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமான அடா சர்மா ஹார்ட் அட்டாக் எனும் தெலுங்கு படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். அடா சர்மா முக்கிய வேடத்தில் நடித்துள்ள சுப்ரமணியம் பார் சேல் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. கரம் போன்ற தெலுங்கு படங்களிலும் அடா சர்மா பிசியாக நடித்து வருகின்றார்.