மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிவந்த கிக் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரவி தேஜா சோகமடைந்துள்ளார். இருப்பினும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் பாலிவுட் படத்தில் நடிக்க வந்த அழைப்பை ரவி தேஜா மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள டோலிவுட்டிற்கு,மறுப்பிற்கு ரவிதேஜா கூறியுள்ள காரணமோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டோலிவுட்டில் பிற முன்னணி நடிகர்களுடன் தான் நடிக்க தயாராகவுள்ளதாகவும் ஆனால் அது போன்று பாலிவுட்டில் நடிக்க விரும்பவில்லை என்று ரவி தேஜா கூறியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து தெலுங்கு படங்களில் நடிக்க விரும்புகிறேன் ஆனால் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வமில்லை என வந்த வாய்ப்பை ரவி தேஜா திருப்பி அனுப்பியுள்ளார். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான பிரபாஸ், அல்லு அர்ஜுன்,ரானா போன்றோர் ஹிந்தி படங்களில் நடிக்க விரும்பும் போது ரவி தேஜா அமிதாப்புடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளது டோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி தேஜா தற்போது பெங்கால் டைகர் என்று படத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார்.