'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஒரே நிறுவனம் பல படங்களின் வியாபாரத்தில் சம்பந்தப்படுவது அந்தப் படங்களுக்கு ப்ளஸ்பாயிண்ட்டாக அமைந்துவிடுவது உண்டு.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கும் 'பாயும் புலி' திரைப்படம் செப்டம்பர் 4 அன்று உலகமெங்கும் வெளியாகவிருக்கின்றது.
இப்படத்தை 'வேந்தர் மூவீஸ்' எஸ்.மதன் தயாரித்துள்ளார். தமிழகத்தில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் 'ரஜினி முருகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. பாயும்புலி, ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்களில் வேந்தர் மூவீஸ் நிறுவனம் சம்மந்தப்பட்டிருப்பதால் பாயும் புலி படத்தின் இடைவேளையில் 'ரஜினி முருகன்' படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டிருக்கிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம். ரஜினி முருகன் திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கின்றது. எனவே பாயும்புலி படத்துடன் ரஜினிமுருகன் டிரைலரை வெளியிடுவது அப்படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என் நினைக்கின்றனர்.