ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் பிரபல நடிகருமான பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தனது படத்தின் டீசரின் வாயிலாக பவன் கல்யாணுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவன் கல்யாண் இன்று(செப்டம்பர் 2) தனது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகின்றார். 44வது பிறந்தநாளைக் கொண்டாடும் பவன் கல்யாணுக்கு திரைப்பட பிரபலங்களும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராம் சரண் தான் தற்போது நடித்து வரும் ப்ரூஸ் லீ படத்தின் இரண்டாவது டீசரை பவன் கல்யாணின் பிறந்தநாளான இன்று வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ஆம் தேதி ப்ரூஸ் லீ படத்தின் முதலாவது டீசரை ராம் சரண் வெளியிட்டார். இயக்குநர் ஸ்ரீனு வைட்டலா இயக்கத்தில் உருவாகும் ப்ரூஸ் லீ படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் திரையிடும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.