'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ருத்ரமாதேவி' படம் அக்டோபர் 9ம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 4ம் தேதி வெளிவருவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிஷத்தில் படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப் போடப்பட்டது. நேற்று படத்தின் வெளியீடு பற்றிய தேதியை இயக்குனர் குணசேகர் வீடியோ அறிவிப்பு மூலம் வெளியிட்டுள்ளார்.
“ருத்ரமாதேவி' திரைப்படம் 3 டியில் படமாக்கப்பட்டதால்தான் எங்களால் செப்டம்பர் 4ம் தேதி சொன்னபடி வெளியிட முடியவில்லை. ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சில சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாது. இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப்பிக் 3டி படமான 'ருத்ரமாதேவி' சில தொழில்நுட்பக் காரணங்களால்தான் தள்ளிப் போனது. இப்போது அனைத்து வேலைகளும் முடிவடைய உள்ளது. அக்டோபர் 9ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அதே தேதியில் படத்தை வெளியிட உள்ளோம்,” என குணசேகர் அறிவித்துள்ளார்.