ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இந்த 5 வருடங்களில் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அனிருத் இசையமைத்தது 10 படங்கள்தான் என்றாலும், அதற்குள்ளாகவே தமிழ்சினிமாவின் மிக முக்கியமான முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார்.
அவரது வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்ல சக இசையமைப்பாளர்களையும் சற்றே பொறாமைப்பட வைத்துள்ளது.
இந்த வருடம் அனிருத் இசையமைப்பில் ஏற்கெனவே வெளிவந்த காக்கிசட்டை, மாரி ஆல்பங்களைத் தொடர்ந்து மேலும் 3 புதிய படங்களின் பாடல்களும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன. அந்த மூன்று ஆல்பங்களுமே அனிருத்தின் கேரியரில் மிக முக்கியமானவையாக இருக்கப்போகிறது. தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'நானும் ரௌடிதான்' படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'தல 56' ஆல்பம் அக்டோபரிலும், வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'விஐபி 2' படத்தின் பாடல்கள் நவம்பரிலும் வெளியாக உள்ளன. இந்த 3 படங்களின் பாடல்கள் மட்டுமின்றி படங்களும் இந்த வருடத்திற்குள்ளாகவே வெளியாக இருக்கின்றன. காக்கிசட்டை, மாரி படங்கள் உடன் 2015ல் வெளியாக உள்ள 'நானும் ரௌடிதான்', 'தல 56' , 'விஐபி 2' ஆகிய படங்களையும் சேர்த்தால் அனிருத்தின் இசையில் இந்த ஆண்டு மட்டுமே 5 படங்கள் வெளியாகிவிடும். கடந்த 2014 ஆம் ஆண்டு கத்தி, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி என அனிருத்தின் இசையமைப்பில் 3 படங்கள் வெளிவந்தன.