ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் ''சதுரன்''. வர்ஷா மலேத்ரியா என்ற புதுமுகம் ஜோடியாக நடிக்கிறார். காளிவெங்கட், செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மோனிக் குமார் ஒளிப்பதிவு செய்கிறர். ஏ.கே.ரிஷல் சாய் இசை அமைக்கிறார்.
சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய கே.ராஜீவ் பிரசாத் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியது: ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர். உதவும் குணம் கொண்ட நல்ல ஆட்டோ டிரைவர். ஒரு நாள் பணிமுடித்து வீடு திரும்பும்போது ஆபத்தில் இருந்து தப்பிக்க ஓடிவரும் ஹீரோயின் அவன் ஆட்டோவில் தஞ்சம் அடைகிறார். அவளை காப்பாற்ற நினைக்கும் அவன் ஒரு சிக்கலில் மாட்டி கொள்கிறார். சர்வதேச மெடிக்கல் மாஃபியா கும்பல் அது. அதிலிருந்து அவர், ஹீரோயினை எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை. இன்றைக்கு உலகிலேயே கொள்ளை லாபம் தரும் வியாபாரம் மருந்துதான். அதை மையமாக வைத்து சொல்லப்படுகிற கதை. பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை ஒரு இரவில் தொடங்கி முடியும். என்கிறார் ராஜீவ் பிரசாத்.