ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். எப்போது இந்த ஜோடி திருமணம் செய்ய போகிறது என்று பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. இதனிடையே கத்ரீனா நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கும் ''பான்டோம்'' படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு கத்ரீனா.... நான் தேசிய விருது பெற்றதுமே திருமணம் தான் என்று கூறினார். பின்னர் சற்றுநேரத்திலேயே நான் நடித்த படம் ஒன்று தேசிய விருது வாங்கிவிட்டால் அடுத்தது திருமணம் தான் என்று கூறியுள்ளார்.
கத்ரீனாவின் இந்த அறிவிப்பை பார்க்கும் போது, இருவரது திருமணமும் இப்போதைக்கு நடக்காது என்று தெரிகிறது. கத்ரீனா தேசிய விருது வாங்கும் வரை ரன்பீர் காத்திருக்க வேண்டியது தான்.!