ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் டோலிவுட்டில் அதிரடி நாயகனாக களம் இறங்கவுள்ளார். இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈரோப்பில் நடைபெறுகின்றது. ஸ்பெயின், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அகில் - சேஷா பங்கேற்கும் டூயட் பாடல் படமாக்கப்படவுள்ளதாம்.இப்பாடல் படப்பிடிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகின்றது. படப்பிடிப்பை முடித்த பின்னர் ஹைதராபாத் திரும்பும் படக்குழு இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளது. மறைந்த மூத்த நடிகரும் அகிலின் தாத்தாவுமான நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் பிறந்த தினமான செப்படம்பர் 26 ஆம் தேதி அகில் நடித்துள்ள படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.