டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் கடந்த சில வருடங்களில் அறிமுகமாகியிருக்கிறார்கள். இயக்குனர்களின் வாரிசு, நடிகர்களின் வாரிசு என பல பேர் நாயகர்களாக மட்டுமே அறிமுகமானார்கள். எதிர்காலத்திலும் இது இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையும், நல்ல படமும் அமைந்தால் மட்டுமே அவர்களால் நிலைத்து நிற்க முடியும். வாரிசு நடிகர் என்பதற்காகவெல்லாம் ரசிகர்கள் அவர்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில்லை.
80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கிடையில் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகராக இருந்தவர் கார்த்திக். அவருடைய வாரிசான கௌதம் கார்த்திக் இயக்குனர் மணிரத்னம் மூலம் 'கடல்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கௌதமின் முதல் படமே தோல்விப் படமாக அமைந்தது. அடுத்தடுத்த படங்களில் அவர் எழுந்து நிற்பார் என்று பார்த்தால், அதன் பின் வெளிவந்த படங்களும் அவருக்குத் தோல்வியாகவே அமைந்தது.