Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அயர்ன்மேன் ஆகத்துடிக்கும் ஆர்யா

01 செப், 2015 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Aryas-dream-about-Iron-man

சில வருடங்களுக்கு முன் கார் ரேஸில் கலந்து கொள்வதில் அஜித்குமார் அதீத ஆர்வம் காட்டி வந்தார். அதனால் அவர் நடித்த படங்கள் தாமதமானதோடு அதனால் அஜித்தை வைத்து படம் எடுத்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாகவோ என்னவோ, பிறகு கார் ரேஸ் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அஜித். அன்றைக்கு கார் ரேஸில் அஜித் காட்டிய ஆர்வத்தைப்போலவே இப்போது சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஆர்யா.


கடந்த சில வருடங்களாக படப்பிடிப்பு தளத்துக்கே சைக்கிளில் வரும் அளவுக்கு சைக்கிள் ஓட்டுவதில் செம ஆர்வமாக உள்ள ஆர்யா, சமீபத்தில், ஸ்வீடன் நாட்டில் நடந்த சைக்கிள் பந்தயம் ஒன்றில் 300 கி.மீ. தூரத்தைக் கடந்து பரிசை வென்று திரும்பினார். அதுவே மிகப்பெரிய சாதனையாக ஆர்யா தரப்பில் சொல்லப்பட்டது.


இந்நிலையில், 'அயர்ன்மேன் டிரைலத்தான்' என்ற கடுமையான போட்டியில் விரைவில் கலந்து கொள்ள திட்மிட்டு பயிற்சி செய்து வருகிறார்ஆர்யா. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால், அயர்ன்மேன் அதாவது இரும்பு மனிதன் என்ற பட்டத்தை வெல்ல முடியும். இந்த பட்டத்தை பெற்றே தீர வேண்டும் என்ற வெறியில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார் ஆர்யா. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் போட்டி இது. இந்த 'அயர்ன்மேன் டிரைலத்தான்' போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள், 3.8 கி.மீ. தூரம் நீச்சலடித்து சென்றுவிட்டு, பிறகு 180.2 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அதன்பிறகு 42.2 கி.மீ. தூரம் ஓடி போட்டியை நிறைவு செய்ய வேண்டும். மிக மிக.. கடினமான இந்தப் போட்டிக்காகத்தான் தற்போது கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஆர்யா. பச்சைக்கிளி முத்துச்சரம் பட வில்லன் வேடத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் இந்த 'அயர்ன்மேன் டிரைலத்தான்' போட்டியில் கலந்து கொண்டதோடு 'இரும்பு மனிதன்' பட்டத்தையும் வென்றுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in