மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பேசத் தெரிந்தும் தமிழில் பேசுவதை கௌரவக்குறைவாக நினைக்கும் நடிகைகள் உண்டு. தமிழே தெரியாமல் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் ஆங்கிலத்திலேயே பேசும் நடிகைகளும் உண்டு இவர்களிடையே எமி ஜாக்சன் மாறுபட்டவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் எமி. அவருக்கும் தமிழுக்கும் நியாயமாகவே லண்டனைவிட தூரம் அதிகம். இருந்தாலும் அவர் தமிழைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். மதராசப்பட்டினம் ,தாண்டவம்,ஐ படங்களைத் தொடர்ந்து இப்போதுதான் தனுஷ் படம் விஐபி.2 ,உதயநிதியின் கெத்து, விஜய்யின் புதிய படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார். அவரது தமிழார்வம் வியப்பூட்டுகிறது என்கிறார்கள் கெத்து படக் குழுவினர். காலையில் படப்பிடிப்புக்கு வந்ததும் எல்லாருக்கும் வணக்கம் சொல்கிறாராம் இதில் கதாநாயக நடிகர் முதல் லைட்மேன் வரைவணக்கம் சொல்கிறாராம்.குட்மார்னிங் என்று இவர்கள் கூறினாலும் அவர் வணக்கம் என்கிறாராம். லைட்மேன், உதவியாளர்கள் எல்லாரையும் அண்ணா சொல்லுங்க என்கிறாராம். அவரிடம் ஆங்கிலத்தில் பேசினாலும் என்கு டமில்ல பேச ஆசை இருக்கு உதவி செய்ங்க, என்று கொஞ்சிக் கொஞ்சித் தமிழில்பேசி அவர்களையே வெட்கப்பட வைத்து விடுகிறாராம் எமி. எல்லாருக்கும் மனிதர்களுக்கு கொடுக்கும் மரியாதையை விட தமிழ் ஸ்வீட் லாங்வேஜ் என்று அவர் கொடுக்கும் தமிழ் மரியாதையை எண்ணி கெத்து குழுவினர் பூரிக்கிறார்கள் .அடடா மெல்லத் தனி இனி சாகாது.