‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு காலத்தில் மலையாள சினிமாவையே நடுநடுங்க வைத்தவர் ஷகிலா. அவர் படத்தின் வசூலுக்கு முன்னால் மம்முட்டி மோகன்லால் படங்களே தடுமாறிய காலம் உண்டு. கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலா, இப்போது காமெடி நடிகையாக மாறிவிட்டார். 40 வயதை நெருங்கிவிட்ட ஷகிலாவுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. கடைசியாக ஒரு அரசியல்வாதியை காதலித்தார். அவரும் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்.
நடித்து சம்பாதித்த பணம் அனைத்தையும் உறவினர்கள் எடுத்துக் கொண்டு ஒதுங்கி கொள்ள இப்போது பெரும் பொருளாதார பிரச்சினையோடு தனிமையில் வாழ்கிறார். அவ்வப்போது நடிக்கும் படங்களின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆதரவற்று நிற்கும் ஷகிலாவை கிருபா என்ற திருநங்கை தன் மகளாக தத்தெடுத்திருக்கிறார்.