அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் படத்தை அப்படியே விட்டு விட்டு சூர்யா தயாரிப்பில் பசங்க 2 படத்தை எடுத்து முடித்து விட்டார். தற்போது விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
மீண்டும் படத்தை இயக்கி முடித்து தருமாறு பாண்டிராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்து வந்தார். தற்போது ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒரு பாடல் காடசியும், 3 வசன காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. வாலு படப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் நேரத்தில் தற்போது இது நம்ம ஆளு படத்தை முடித்து திரைக்கு கொண்டு வர சிம்பு முடிவு செய்துள்ளார். இதற்காக நயன்தாராவை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளார் சிம்பு. அதற்கு நயன்தாரா மறுத்துவிட்டதாக தெரிகிறது.