'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசான தெலுங்கு நடிகர் வருண் தேஜா, முகுந்தா என்ற படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். தற்போது டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் லோபர் படத்தில் வருண் தேஜா நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னதாக வருண் நடித்த கஞ்சி படம் தற்போது திரைக்கு வர தயாராகிவிட்டது. கஞ்சி படத்தில் நாயகியாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்துள்ளார். பர்ஸ்ட் பிரேம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் பிரபல நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாளில் (செப்டம்பர் 2) வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 ஆம் தேதி கஞ்சி படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.