ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'சென்னை 28, சரோஜா, கோவா' ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, அஜித் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதைக் கேட்டு திரையுலகத்தினர் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்கள் கூட ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். விளையாட்டுத்தனமாக படங்களை இயக்கியவர் எப்படி அஜித்தை வைத்து படத்தை இயக்குவார் என கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கு அடுத்த வருடம் 2011ம் ஆண்டு இதே நாளில் 'மங்காத்தா' வெளிவந்து வெங்கட்பிரபுவைப் பற்றிக் கேள்வி எழுப்பியவர்களின் வாயை அடைத்தது. அப்படி ஒரு வெற்றிப் படமாக 'மங்காத்தா' அமைந்தது.
ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் அஜித்தின் நடிப்பும், ஸ்டைலிஷான உருவாக்கமும், யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்தின. ஒரு விறுவிறுப்பான, பரபரப்பான ஆக்ஷன் படத்தைக் கொடுத்து முன்னணி இயக்குனர்களையும் ஆச்சரியப்பட வைத்தார் வெங்கட் பிரபு. அஜித்தின் வெற்றிப் படங்களின் வரிசையில் மட்டுமல்லாது, சிறந்த படங்களின் வரிசையிலும் 'மங்காத்தா' படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.